Pages

Tuesday, November 10, 2009

ரஜினிகாந்தின் முதல் தயாரிப்பு சிரித்த ரஜினி

சமீபகாலமாக, சினிமாத்தனம் இல்லாத யதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றன. அப்படிப்பட்ட இயல்பான-சமகாலத்தை சித்தரிக்கும் படம், `கோவா.' அனிமேஷன் துறையில் தனி முத்திரை பதித்த சவுந்தர்யா ரஜினிகாந்தின் முதல் தயாரிப்பு. `சென்னை-28,' `சரோஜா' ஆகிய படங்களை அடுத்து, வெங்கட்பிரபு டைரக்டு செய்யும் படம் இது.



இந்த படத்தின் கதையை கேட்டு, சவுந்தர்யா விழுந்து விழுந்து சிரித்தார். தான் கேட்ட கதையை தந்தை ரஜினிகாந்திடமும் அவர் சொல்ல-ரஜினிகாந்தும் வயிறு குலுங்க சிரித்து இருக்கிறார். கோவாவை பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை இது.

படித்துவிட்டு வேலை தேடும் நண்பர்கள், கோவாவுக்கு உல்லாச பயணம் செல்கிறார்கள். அங்கு அவர்களுக்குள் நடக்கும் நட்பு, காதல், மோதல், பிரச்சினைகள், தீர்வுகளை கதை சித்தரிக்கிறது. ஜெய், பிரேம்ஜி, வைபவ், அரவிந்த் ஆகாஷ், சம்பத், சினேகா, பியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பெரும்பகுதி படப்பிடிப்பு கோவாவில் நடந்தது. மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இரவு விடுதிகளில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. தேனி, பண்ணைபுரம், மதுரை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

சக்தி சரவணன் ஒளிப்பதிவில், யுவன்சங்கர்ராஜா இசையில், வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தை வெங்கட்பிரபு டைரக்டு செய்து வருகிறார்.

No comments:

Post a Comment