
உலகில் அமைந்துள்ள பெரிய நகரங்கள் பலவும் அடுத்த 15 ஆண்டுகளில் வேகமான வளர்ச்சி அடைந்து வருகின்றன. டில்லி, காங்க்சவ், ரியோ டீ ஜெனிரோ, இஸ்தான்புல் மற்றும் கெய் ரோ ஆகிய நகரங்கள், வரும் 2025ம் ஆண்டுக்குள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.தற்போது, டோக்கியோ, நியூயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ், லண்டன் மற்றும் சிகாகோ ஆகிய ஐந்து நகரங்கள் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ளன.தற்போது பொருளாதார வளர்ச்சியில், 25வது இடத்தில் இருக்கும் ஷாங்காய், வரும் 2025ம் ஆண்டு 9வது இடத்திற்கு முன்னேறும்.
அதே போன்று 29வது இடத்தில் இருக்கும் மும்பை நகரம், வரும் 2025ம் ஆண்டு 11வது இடத்திற்கும், 39வது இடத்தில் இருக்கும் பீஜிங் 17வது இடத்திற்கும், 10வது இடத்தில் இருக்கும் சாவ் பாவ்லோ மற்றும் பிரேசில் ஆகியவை 6வது இடத்திற்கும் முன்னேறும்.ஷாங்காய், பீஜிங் மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் ஆண்டுக்கு, 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகின்றன. ஆனால், லண்டன், நியூயார்க், டோக்கியோ மற்றும் சிகாகோ ஆகிய நகரங்கள் ஆண்டுக்கு 2 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்து வருகின்றன.அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த சில நகரங்களின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த 15 ஆண்டுகளில், மெதுவாக சரிவை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment