
குழந்தையை வைத்து ஆபாசப் படம் எடுத்து, இணையதளத்தில் வெளியிட்ட நெதர்லாந்து ஆசாமியை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, சைதாப்பேட்டை கோர்ட் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை வைத்து படம் பிடித்து, பாலியல் குறும்பட, "சிடி' எடுத்து இணையதளம் மூலம் பரப்பி வருவதாக ஜெர்மனியை சேர்ந்த தொண்டு நிறுவனம் இன்டர்போல் மூலம் சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் அளித்தது. விசாரணையில் சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வந்த நெதர்லாந்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் காரணம் என தெரியவந்தது. அவரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கடந்த 6ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சைதாப்பேட்டை கோர்ட்டில் அவருக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு மீதான விசாரணை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வில்லியம்ஸ் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை ஏற்று, மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார்.
No comments:
Post a Comment