Pages

Wednesday, November 11, 2009

செல் போனில் பேசினால் ஆறு மாத சிறை ?

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காதுக்கும் தோளுக்கும் இடையே செல்போனை வைத்து கழுத்தை சாய்த்தபடி வாகனம் ஓட்டுபவர்களை எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஆனால் ஹெட்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது சர்வ சாதாரணமாகி விட்டது. நன்கு படித்து, உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் புழங்கும் நகர்ப்பகுதிகளில்தான் இத்தகைய விதிமீறல்கள் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விதிமுறைகளை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டி, விதிமீறலில் ஈடுபடுவோருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை அல்லது இவை இரண்டையும் சேர்த்து விதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment