Pages

Wednesday, November 11, 2009

நடிகன் சூர்யா மீது இன்னும் ஒரு வழக்கு ?

சென்னை: சென்னை தி.நகரில் சொத்து வாங்கிய விவகாரத்தில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகாவுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியரான அசோக் என்பவர், நடிகர் சூர்யர் மற்றும் அவரது மனைவி ஜோதிகா மீது சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: சென்னை தி.நகர் சரவண முதலி தெருவில் சுமார் எட்டரை கிரவுண்ட் நிலம் உள்ளது. சரவண முதலியாருக்கு சொந்தமான நிலம் இது. அவருடைய பேரன் என்ற முறையில் இந்த நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு எனக்கு சேர வேண்டும். ஆனால், எனக்கு தெரியாமல் இந்த நிலத்தை என் தந்தையின் சகோதரர்கள் வேறு ஒரு நபருக்கு விற்றதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அந்த நிலத்தை அந்த நபர் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகாவுக்கு விற்பனை செய்துள்ளார். தற்போது அங்கு கட்டுமானப் பணிகளை சூர்யா மேற்கொண்டு வருகிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும். நடிகர் சூர்யாவுக்கு நிலத்தை விற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அசோக் கூறியுள்ளார். அவரது சார்பாக வக்கீல் மதன்பாபு, மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன்பு இன்று மாலை விசாரணைக்கு வருகிற

No comments:

Post a Comment