திருச்சி அருகே, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில், 9.5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, வங்கியின் செயலர் நேற்று கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த கரியமாணிக்கம் கிராமத்தில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில், மண்ணச்சநல்லூரை அடுத்த அய்யம் பாளையத்தைச் சேர்ந்த போஜராஜன்(60) செயலராக பணியாற்றி வந்தார்.
இவர், வங்கியின் சேமிப்புக் கணக்கு மற்றும் காசோலை மூலம் வந்த, 9.5 லட்சம் ரூபாயை, வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல், மோசடி செய்தது தெரியவந்தது.இதுகுறித்து, கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர், திருச்சி மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார், வங்கிப் பணத்தை மோசடி செய்த போஜராஜனை நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போஜராஜன், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tuesday, November 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment