
அமெரிக்க பொருளாதார பத்திரிகையான போர்பஸ் ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
அதில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி. அவருடைய சொத்து கடந்த ஆண்டை விட 54 சதவீதம் அதிகரித்து உள்ளது.
2-வது இடத்தை லட்சுமி மித்தல் பிடித்து உள்ளார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி.
முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி ரூ.87 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்.
விப்ரோ கம்ப்யூட்டர் அதிபர் அசிம் பிரேம்ஜி ரூ.73 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
No comments:
Post a Comment