தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக உலகையே கைக்குள் கொண்டு வரும் சாதனங்கள் மிக சாதாரணமாக கிடைக்கின்றன. செல்போன், லேப்டாப், இண்டர் நெட் போன்ற அறிவியல் வளர்ச்சியால் உலகில் எந்த மூளையில் இருக்கும் ஒருவரிடமும் எளிதில் தொடர்பு கொண்டு பேசிவிடலாம்.
இதில் செல்போன்தான் அனைவர் கைகளிலும் மிக சாதாரணமாக புழங்கும் தகவல் தொடர்பு சாதனமாகும். கைக்குள் அடங்கும் செல்போனால் எண்ணற்ற பயன்கள் கிடைக்கின்றன. அதே வேளையில் சில பாதகமான செயல்களுக்கும் இக்கருவி பயன்படுபடுத்தப்படுவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது உள்ளது.
தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் செல்போன்களில் சிம்கார்டை மாற்றி மாற்றி பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்துவதாக உள்ளனர். 10-க்கும் மேலான சிம்கார்டுகளை வாங்கி செல்போனில் போட்டு வெடிகுண்டு மிரட்டல், கடத்தல், போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அவர்கள் எங்கிருந்து, எந்த செல்போனில் இருந்து பேசுகிறார்கள். என்பதை கண்டறிவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் செல்போனில் அடையாள எண் இல்லாததே ஆகும்.
இண்டர் நேஷனல் மொபைல் எக்கியூப் மென்ட்ஸ் ஐடிட்டி பிகேஷன் ஐ.எம்.இ.ஐ.) என்ற 15 இலக்கு எண் ஒவ்வொரு செல்போன்களிலும் இருக்கும். அந்த அடையாள எண் உள்ள செல்போன்கள் மட்டுமே பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டவையாகும்.
இந்த அடையாள குறியிட்டு எண் மிக அவசியமாகும். இதை வைத்துதான் இந்த செல்போன் யாருடையது என்பதை கண்டுபிடிக்க முடியும். சாப்ட்வேரில் இணைக்கப்பட்டுள்ள இந்த எண்ணை கொண்டு, செல்போன் திருடு போனாலோ, தொலைந்தாலோ கண்டு பிடிக்க முடியும். தடை செய்யப்பட்ட திருட்டு சிம்களை கண்டு பிடிப்பதற்கும் அடையாள எண் அவசியம் தேவைப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பை கருதி அடையாள எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்க மத்திய டெலிபோன் இலாகா முடிவு செய்துள்ளது. டிசம்பர் 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் இவை நடைமுறைக்கு வருகிறது.
இதுபற்றிய தகவல் அனைத்து செல்போன் ஆபரேட்டர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத செல்போன்கள் 1-ந்தேதி முதல் செயல்படாது அந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விடும். அதற்குள் அடையாள எண் இல்லாமல் செல்போன் வைத்திருப்பவர்கள் 15 இலக்கு எண்ணை பெற்று பதிவு செய்ய வேண்டும்.
இதற்காக செல்லுலர் ஆபரேட்டர் அசோசியேசன் செயல்படுகிறது. அந்த மையத்துக்கு சென்று அடையாள எண் பெற்றுக்கொள்ளலாம். சென்னை பர்மா பஜாரில் சீனா, கொரியா போன்ற நாடுகளின் செல்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இது போன்ற செட்டுகளில் அடையாள எண் இருப்பது இல்லை. குறைந்த விலையில் விற்கப்படுவதால் நிறையபேர் அதை பயன்படுத்துகிறார்கள்.
இது போன்ற செல்போன்கள் தான் தவறாக பயன் படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வெளிநாட்டு செல்போன்களை வாங்கி உள்ளவர்கள் அதில் அடையாள எண் இல்லாமல் இருந்தால், உடனே வந்து ஐ.எம்.இ.ஐ. நம்பரை பெற வேண்டும். தங்களது செல்போனில் ஐ.எம்.இ.ஐ. என் உள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிய செல்போனில் ஸ்டார் பட்டனை முதலில் அழுத்த வேண்டும் பின்னர் ஆஷ் பட்டனை அழுத்தி 06ஐ அழுத்தவும். அதைத் தொடர்ந்து ஆஷ் பட்டனை அழுத்தினால் உங்கள் போனில் 15 இலக்கு எண்கள் வரும். அதுதான் அடையாள குறியிட்டு எண்ணாகும்.
இந்த எண் இல்லாத கோடிக்கணக்கான செல்போன்கள் செயல்பாட்டை இழக்க நேரிடும்.
Thursday, November 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment