Pages

Sunday, November 8, 2009

திருப்தி தேவஸ்தானம் உயர்த்திய சேவை கட்டணம்

திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலின் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த தேவஸ்தான போர்டு ஆலோசித்து வருகிறது. கோவிலில் நித்ய சேவா டிக்கெட்டுகளை கூடுதலாக வழங்கவும் இம்மாதம் கடைசி வாரத்தில் நடைபெற உள்ள போர்டின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ள உள்ளதாக திருப்பதி தேவஸ்தான வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
அதிகாலை சுப்ரபாதம் ரூ.120, தோமாலை சேவை ரூ.220, அர்ச்சனை சேவை ரூ.220க்கு முன்பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு, இந்த விலை நிர்ணயப்படி டிக்கெட்டுகள் கிடைக்கும். இந்த சேவைகளுக்காக, சிபாரிசின் பேரில் அதிகாரிகளால் வழங்கப்படும் டிக்கெட்டுகளின் விலையை 100 சதவீதம் வரை உயர்த்த தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

அதிகாலை சுப்ரபாத சேவைக்காக வழங்கப்படும் 300 டிக்கெட்டுகள் 600 ஆக உயர்த்தப்படும், தோமாலை, அர்ச்சனை சேவைக்கு 125க்கு பதிலாக, (செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில்) 150 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளுக்கு 2013 முதல் 2015ம் ஆண்டு வரை டிக்கெட்டுகள் தற்போது முன்பதிவாகி உள்ளன. ஸ்ரீதேவி பூதேவி சமேதரான மலையப்பசாமி உற்சவ மூர்த்திக்கு தினசரி நடத்தப்படும் கல்யாண உற்சவம், டோலோத்சவம், ஆர்ஜித பிரம்மோத்சவம் சகஸ்ரதீப அலங்கார சேவைகளுக்கான 1,000 ரூபாய் டிக்கெட்டுகள் மற்றும் வசந்த உற்சவம் 3,000 ரூபாய் டிக்கெட்டுகளை, கோட்டா முறையில் பக்தர்களே நேரிடையாக பேங்க் கவுன்டரில் பெற்றுக் கொள்ளலாம்.சேவா டிக்கெட்டுகளுக்கு பக்தர்களிடையே அதிக வரவேற்பு உள்ளதால் இவற்றின் விலையை உயர்த்தவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அபிஷேகம், வஸ்திர அலங்கார சேவைகளுக்கு பக்தர்கள் இதுவரையில் 2029ம் ஆண்டு வரையிலும், திருப்பாவாடை சேவைக்கு 2018 வரையிலும் முன்பதிவு செய்துள்ளனர். இனி அனைத்து சேவைகளுக்கும், டிக்கெட்டுகளை ஓராண்டு முடிவுக்குள் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ளவும், தற்போது புதன் கிழமைகளில் நடத்தப்படும் சகஸ்ர கலசாபிஷேக சேவையை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடத்தவும் போர்டு ஆலோசித்து வருகிறது.
மேலும், ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்காக முன்பதிவு செய்ய பக்தர்கள் அனுப்பிய டி.டி.,க்களையும், தேவஸ்தான அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment