Pages

Tuesday, November 10, 2009

போதை பொருள் கடத்தலில் மலேசியா மாது

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின்பேரில் ஜப்பானிய மாது ஒருவர் மலேசியாவில் விசாரிக்கப்படுகி„றர்.
குற்றாவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று சுங்கத் துறை மூத்த அதிகாரி ஒருவர் சொன்னார்.
“அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் இன்றோ (திங்கட்கிழமை) அல்லது நாளையோ அந்த மாது மீது குற்றம் சுமத்தப்படும்,” என்று சுங்கத்துறை துணை இயக்குநர் முகம்மது சுப்ரி சொன்னதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அந்த மாதுக்கு வயது 30. அக்டோபர் 30ம் தேதி துபாயில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய அந்த மாது 4.7 கிலோ போதைப் பொருட்களுடன் பிடிபட்டார். பிடிபட்ட போதைப் பொருளின் மதிப்பு 490,000 டாலர். மலேசியாவில் போதைப் பொருட்களுடன் ஒரு ஜப்பானியப் பெண் பிடிபட்டு இருப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment