Pages

Saturday, November 14, 2009

'நல்வரவு' ஒலி நாடா வெளியீடு என்கிற பெயரில் விவேக் பத்திரிகையாளர்களை திருப்தி படுத்த முயன்ற ஆர்.கே.செல்வமணி போட்ட திட்டம் அம்பேல் !

நடிகன் விவேக்கிற்கு எதிராக 'நல்வரவு' பட ஒளிப்பதிவு நாடா வெளியிட்டு விழாவை விட்டு வெளியேறிய மானமுள்ள பத்திரிகையாளர்கள் .

சென்னையில் இந்த மாதம் பதிமூன்றாம் தேதி விழா பிலிம் சேம்பரில் நடந்தது .முதலில் பேசிய டைரக்டர் செல்வமணி 'பத்திரிகையாளர்களுக்கும் ' விவேகிற்கும் ' பிரச்சனை உள்ளது . அவர்தான் ஒலி நாடா வெளியிட போகிறார் .!
அது பற்றி என்றதும் சன் டி வீ குழுமத்தின் வண்ணத்திரை பொறுப்பாசிரியர் திரு. நெல்லை பாரதி எழுந்து " இங்க பாருங்க எங்களை ஒலி நாடா வெளியீடு விழா என்றுதான் அழைத்தார்கள் .வந்திருக்கிறோம் .விவேக் பிரச்சனையை பற்றி பேச அல்ல முதலில் விழாவை நடத்துங்கள்" என விவேக் எதோ பேச ஆரம்பிக்க ஒட்டு மொத்த பத்திரிக்கையாளர்களும் எழுந்து வெளி நட்பு செய்து விட்டனர்.நடிகன் விவேகின் முகம் செத்து விட்டதாம். பத்திரிகையாளர்களை முட்டாள் ஆக்க முயன்ற செல்வமணி இந்த விழயத்தில் தலையிட்டதை யாருமே விரும்ப வில்லையாம். செல்வமணிக்கு என் இந்த வேலை என்று காது பட பேசினார்களாம்.எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றி விட்டாராம் .படத்தின் ஒலி நாட விழா புகைபடத்தில் நகைச்சுவை நடிகன் படம் பத்திரிகைகளுக்கு அனுப்பட்டது.அந்த நடிகன் படத்தை வெட்டி கடாசி விட்டு க்ரூப் போட்டோவை வெளியிட்டன பத்திரிகைகள் .

கொட்டிய வார்த்தைகளை அல்ல முடியுமா ? பெரிய பெரிய நடிகன் எல்லாம் கடைசியில் ரயில்வே ஸ்டேஷனில் பார்க்க ஆள் கூட இல்லாமல் அம்போ என்று இறங்கியது இன்று இருக்கும் நடிகர்களுக்கு தெரியாதா ? கெட்ட வரவான நல்வரவு ?

-நக்கல் நாகராசன்

No comments:

Post a Comment