Pages

Sunday, November 15, 2009

ராஜ் தாகரே மிரட்டல்

"மண்ணின் மைந்தர்களான மராத்தியர்களுக்கு, வேலை கொடுப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.,) வங்கிக்கு, ராஜ் தாக்கரே மிரட்டல் விடுத்துள்ளார்.எஸ்.பி.ஐ., இன்று, மும்பையில் பல்வேறு பணிகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்துகிறது. அந்தப் பணிகளில் மராத்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, நவநிர்மாண் சேனா கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:மொத்தம் ஒன்றரை லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 70 சதவீதம் பேர் வெளியூரைச் சேர்ந்தவர்கள். பணிகள் இருப்பதோ மும்பையில். எனவே, மராத்தியர்களுக்கு வங்கிப் பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.வங்கி அதிகாரிகள் இது குறித்து டில்லியில் உள்ள தங்கள் தலைமை அலுவலக அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment