2007ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் 71 கலைஞர்கள்கள் பட்டியலை, ஏற்கனவே முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். அவர்களுக்கு விருது வழங்கும் விழா இம்மாதம் 28ம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடக்கிறது. விருது பெறுவோரில், இயற்றமிழ்க் கலைஞர்கள் மாதவன், மறைமலையான், சரோஜ் நாராயணசாமி, ஆண்டாள் பிரியதர்சினி, மணிலால், பெரு மதியழகன், சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோரும், இயற்றமிழ் ஆராய்ச்சியாளர் சரளா ராஜகோபாலன், இயற்றமிழ் பண்பாட்டுக் கலைஞர் குருசாமி தேசிகர், இலக்கியப் பேச்சாளர்கள் அவ்வை நடராஜன், மாசிலாமணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இசைத்துறையில், சீர்காழி ஜெயராமன், முத்தப்ப பாகவதர், மகாராஜபுரம் சீனிவாசன், ஆண்டாங்கோவில் சிவகுமார், தாயன்பன், கண்ணன், வழுவூர் ரவி, டிரம்ஸ் சிவமணி, சுகி சிவம், சதாசிவன், வீரமணி ராஜு, ராஜகோபால் பிள்ளை, மீனாட்சிசுந்தரம், தலைச்சங்காடு ராமநாதன், மணிகண்டன் ஆகியோரும், பரதநாட்டியத்தில், ஷைலஜா, ஸ்வேதா கோபாலன், சங்கீதா கபிலன், கயல்விழி கபிலன், ஐஸ்வர்யா, ஜாகீர் உசேன், வசந்தா வைகுந்த் ஆகியோரும், நாடகத் துறையில் ராமசாமி, கூத்துப் பட்டறை முத்துசாமி, வி.ஒய்.தாஸ், ராஜாமணி ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
Tuesday, November 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment