Pages

Tuesday, November 3, 2009

நிலையான சொத்துக்களின் மதிப்பு 32 ஆயிரம் கோடி


நிலையான சொத்துக்களின் மதிப்பு 32 ஆயிரம் கோடி



திருமலை திருப்பதி தேவஸ்தானம், அதன் சொத்து மதிப்பு பட்டியலை தாக்கல் செய்யும்படி, சில மாதங்களுக்கு முன், ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, தேவஸ்தான நிர்வாகம், நேற்றுமுன்தினம் (திங்கள் கிழமை), ஐகோர்ட்டில், சொத்துக்களின் பட்டியலை தாக்கல் செய்தது. அதில் " கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் வரை, 72 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் உள்ளன. அதில், வெங்கடேச பெருமானின் ஆபரணங்கள் மட்டும் 52 கோடி ரூபாய் மதிப்புடையவை. ஆபரணங்களுக்கு, தற்போதைய மார்க்கெட் மதிப்பை கணக்கில் கொள்ளவில்லை.



பூர்வகால தேவஸ்தான ஆவணங்களின்படியே, கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில், தேவஸ்தானத்திற்கு காணிக்கை கிடைத்துள்ள தங்க ஆபரணங்களின் விவரங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. நிலையான சொத்துக்களின் மதிப்பு 32 ஆயிரம் கோடி ரூபாய். இதுவும், தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி, மதிப்பிடப்பவில்லை" என்று கூறப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment