Pages

Monday, November 16, 2009

கோர்டில் சரண் அடைந்த அர்ச்சகர் ?


காஞ்சிபுரத்தில் கோவில் உள்ளே பெண்களுடன் உல்லாசமாக இருந்த வழக்கில், போலீசாரால் தேடப்பட்ட அர்ச்சகர் நேற்று காஞ்சிபுரம் கோர்ட்டில் சரணடைந்தார். காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ள பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் தேவநாதன்(35). இவர் காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் உள்ள மச்சேஸ்வரர் கோவிலில், அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த வருடம் கோவில் கருவறை அருகே உள்ள அறையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதை தனது மொபைலில் படம் பிடித்துள்ளார். இது தவிர வீடுகளில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளையும் மொபைலில் படம் பிடித்துள்ளார். இக்காட்சிகள் வெளியில் பரவின. கோவில் உள்ளே அர்ச்சகர் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச காட்சிகளைக் கண்ட பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


இது குறித்து, கடந்த செப்டம்பர் மாதம் சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதை அறிந்த அர்ச்சகர் தேவநாதன் தலைமறைவானார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, தேவநாதன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். நேற்று பகல் ஒரு மணிக்கு தேவநாதன் தனது வக்கீல்கள் தமிழ்ச்செல்வன், தேசாய் ஆகியோருடன் காஞ்சிபுரம் ஜே.எம்.முதல்வகுப்பு கோர்ட்டுக்கு வந்து சரணடைந்தார்.


பகல் ஒரு மணிக்கு கோர்ட்டில் சரணடைந்த தேவநாதனிடம் அவரது பெயர் மற்றும் தந்தை பெயரை நீதிபதி சுதா கேட்டார். பின்னர் உங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரம் தெரியுமா என்றார். அவர், " ஆம்' என்றார். அதைத் தொடர்ந்து, அவரை வரும் 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி சுதா உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவரை காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். வழக்கு தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment