Pages

Friday, November 20, 2009

இந்திரா காந்தியாக மாதுரிதீட்சித் !

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது. இப்படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் மாதுரிதீட்சித் நடிக்கிறார். 42 வயதான மாதுரி தீட்சித் மெகா ஹிட் இந்திப் படங்களில் ஏற்கனவே நடித்துள்ளார்.வசூலை வாரி குவித்த தேஷாப் தில் பேட்டா, தேவதாஸ் போன்ற படங்கள் மாதுரி தீட்சித் நடித்தவை. கடைசியாக ஆஜா நாச்லே என்ற படத்தில் நடித்தார். இது எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. அதன் பிறகு அமெரிக்க டாக்டர் ஸ்ரீராமை திருமணம் செய்து கொண்டு அங்கு குடியேறினார். இவர்களுக்கு அரின், ராயன் என இரு மகன்கள் உள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திரா காந்தி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.இப்படத்தை பிரபல டைரக்டர் கிருஷ்ணாஷா இயக்குகிறார். திரைக்கதை, தயாராகிவிட்டது. வருகிற ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டு உள்ளனர். 2011 இறுதியில் படம் ரிலீசாகும்.அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

இந்திராவின் இளமைப்பருவம், திருமண வாழ்க்கை, அரசியல் பிரவேசம், பிரதமரானது இறுதியில் பாதுகாவலராலேயே சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற அனைத்து விவரங்களும் இப்படத்தில் காட்சிகளாக்கப்படுகின்றன.

இந்திரா காந்தி படத்தில் பாடல்கள் இருக்காது என்றார் கிருஷ்ணாஷா .

No comments:

Post a Comment