Pages

Wednesday, November 18, 2009

சிறப்பு போலீஸ் அதிகாரி ருக்ஷனா

காஷ்மீர் மாநிலம் ராஜுரி மாவட்டத்தை சேர்ந்த ருக்ஷனா (வயது 19) என்ற பெண் தனது சகோதரரை கொல்ல வந்த தீவிரவாதிகளின் துப்பாக்கியை பறித்து அதில் ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து ருக்ஷனாவை தீர்த்து கட்ட தீவிரவாதிகள் திட்ட மிட்டனர். எனவே அவரை பாதுகாப்பான இடத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர். அவரது வீட்டிலும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதையும் மீறி கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் ருக்ஷனா வீடு மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். துப்பாக்கியாலும் சுட்டனர்.

அப்போது தீவிரவாதிகள் பேச்சை இடைமறித்து கேட்ட போது ருக்ஷனாவையும், அவரது குடும்பத்தினரையும் கூண்டோடு கொல்ல தீவிர வாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் ருக்ஷனாவை ரகசிய இடத்தில் தங்க வைத்து உள்ளனர். அவரை டெல்லியில் தங்க வைத்து இருப்பதாக தகவல் வந்தது. இதை போலீசார் மறுத்தனர்.

அவருக்கும் அவரது சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோருக்கும் சிறப்பு போலீஸ் அதிகாரி என்ற பதவியை காஷ்மீர் போலீசார் வழங்கி உள்ளனர்.

No comments:

Post a Comment