Pages

Wednesday, November 11, 2009

கற்பழிப்பு ?

சென்னை

அந்தமான் தீவில் வசிப்பவர் சுவித் நாராயணன் (20). அங்குள்ள நட்சத்திர ஓட்டல் மேலாளர். அந்தமான் வனத்துறை அதிகாரியின் மகளை பலாத்காரம் செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அந்தமானில் இருந்து சென்னைக்கு நேற்று காலை புறப்பட்ட தனியார் விமானத்தில் சுவித் நாராயணன் தப்பி செல்வதாக அந்தமான் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் வருவதற்குள் விமானம் சென்னை புறப்பட்டு விட்டது. இதுகுறித்து சென்னை மாநகர போலீசுக்கு அந்தமான் போலீசார் உடனடியாக தகவல் கொடுத்தனர். விமானம் காலை 10.30 மணிக்கு சென்னை வந்திறங்கியது. விமானத்தில் வந்த சுவித் நாராயணனை போலீசார் பிடித்தனர். ஆனால் அவர், ‘‘நான் இதய நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்துள்ளேன்’’ என்று கூறியுள்ளார். நாராயணன் என்ற பெயரில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து அவரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment