அறக்கட்டளை விருது, இந்தாண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழங்கப்படுகிறது. இதுபற்றி பி.சுசீலா கூறியதாவது: திரையுலகில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு எனது அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சுசீலா விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு எஸ்.ஜானகி பெற்றார். இந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெறுகிறார். இந்த விருதுடன் ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. நவம்பர் 14ம் தேதி ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் இந்த விருது வழங்கும் விழா நடக்கிறது. பாலமுரளிகிருஷ்ணா, டி.எம்.சவுந்திரராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, எஸ்.ஜானகி, பி.பி.சீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று யூ.கே.முரளி இசையில் பாடுகின்றனர்.
இதில் திரளும் நிதியில் பாதி, ஆந்திர வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்படும். தலைமை தாங்குவதற்கு கமல்ஹாசனை அழைக்க உள்ளேன். இவ்வாறு பி.சுசீலா கூறினார்.
No comments:
Post a Comment