Pages

Friday, November 6, 2009

ஊர் ஊராய் கேஸ் நடிகன் நடிகைகள் அவஸ்தை

ஸ்ரீவில்லிபுத்தூர்: பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் பேசிய நடிகை, நடிகர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நவ.,30ல் ஆஜராக மாஜிஸ்திரேட் ராஜ்குமார் உத்தரவிட்டார்.பத்திரிகையாளர் ஆர்.வி.ராமனாதன் தொடர்ந்த வழக்கில் நேற்று அவர் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது


,தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க கூட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா பேசுகையில்,"பத்திரிகையாளர்களை கேடு கெட்ட நல்ல தாய், தந்தைக்கு பிறக்காத ஈனப்பசங்க என்று மேடையிலேயே காறி துப்பினார். நடிகர் விஜயகுமார் பேசுகையில்," பத்திரிகை பிசினஸ் படுத்து விட்டால் அக்கா , தங்கைகளை விபச்சாரத்திற்கு அனுப்பட்டும். செய்தி கிடைத்ததும் நேராக பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து நாலு பேரையாவது வெட்டணும்' என பேசியுள்ளார்.


சத்யராஜ் பேசுகையில்,"பத்திரிகையாளர்களின் கையை உடைக்கணும், கண்ணை நோண்டனும், உள்காயம் தெரியாமல் அடிக்கணும், ஸ்ரீபிரியாவுக்கு ஆதரவாக கையை உயர்த்த வேண்டும் அப்படி செய்தால் என்ன புடுங்குவான்' என பேசியுள்ளார். சூர்யா பேசுகையில்," நடிகையின் கால்களுக்கிடையில் உட்கார்ந்து போட்டோ எடுக்கும் ஈனப்பசங்க' என பேசியுள்ளார்.விஜய் அருண் பேசுகையில்,"பத்திரிகையில் எழுதினவனை இழுத்து வந்து மஞ்சுளா காலடியில் போட்டு மன்னிப்பு கேட்க வைப்பேன்.' என பேசியுள்ளார்.


சேரன் பேசுகையில்," ராஸ்கல் .. உங்க அக்கா,தங்கை ஓடிப்போனா தெரியும்டா வலி' என பேசியுள்ளார். விவேக் பேசுகையில்," ஒரு அப்பனுக்கு ஆத்தாவுக்கு பிறந்திருந்தா பெயரை போட்டு எழுது. ஒரு குவார்ட்டருக்கும், கோழிப்பிரியாணிக்கும் எழுதும் ஈனப்பசங்க. உங்க அக்கா, தங்கை, ஆத்தா படங்களை தாருங்கள் கிராபிக்ஸ் போட்டு ஜட்டி, பிரா போட்டு சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டுவேன்' என பேசியுள்ளார். இவர்களது பேச்சுகள் கடந்த அக். 9ம் தேதி "விண்' டிவியில் வெளியானது.


இதை பார்த்த எனது நண்பர்கள் என்னிடம் விசாரித்தனர். இதனால் நான் மன வேதனையடைந்ததோடு எனது தொழிலுக்கு இழுக்கையும் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்திய நடிகர்கள், நடிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என அதில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வக்கீல் ஏ.விஜயராஜன் வாதிட்டார்.இதை தொடர்ந்து மாஜிஸ்திரேட் ராஜ்குமார், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நடிகை, நடிகர்கள் வரும் 30ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டார்.








No comments:

Post a Comment