Pages

Thursday, November 19, 2009

சபாஷ் சரியான தீர்ப்பு ? இதே வேகம் பாமரனுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும்?

நடிகர் விஜய்க்கு நிலம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்த மனு:கடந்த 1969ம் ஆண்டு கொரட்டூர் வீட்டு வசதி திட்டத்தைச் செயல்படுத்த, பாடியில் உள்ள எங்கள் நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்தது. இந்நிலையில், பாடியில் உள்ள 38 சென்ட் நிலத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டப் பட்டது. அதுகுறித்து விசாரித்த போது, அந்த நிலத்தை நடிகர் விஜய் வாங்கியதாக தெரிந்தது.


பாடியில் 27 சென்ட் நிலத்தை நடிகர் விஜய்க்கு ஒதுக்கீடு செய்து, 2007ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறி, விஜய்க்கு 27 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. எனவே, இந்த 27 சென்ட் நிலத்தில் எந்த கட்டுமானத்தையும் மேற்கொள்ள நடிகர் விஜய்க்கு தடை விதிக்க வேண்டும். அவருக்கு நில ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


வீட்டு வசதி வாரியம் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: வாரியம் நடத்திய பொது ஏலத்தில் விஜய் தரப்பில் கலந்து கொண்டு, அசோக் நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் எட்டு கிரவுண்ட் இடத்துக்கு அதிக ஏலம் கேட்டனர். பின், விஜய்க்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டது. ஐகோர்ட்டில் அப்பீல் மனு நிலுவையில் இருக்கும் போது, விஜய்க்கு மாற்று இடம் ஒதுக்குவதாக வீட்டு வசதி வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாடியில் நான்கு கிரவுண்டுக்கும் மேல் இடம் ஒதுக்கப்பட்டது. பின், அப்பீல் வழக்கு பைசல் செய்யப்பட்டது. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டது.


மனுவை விசாரித்த நீதிபதி ஜோதிமணி பிறப்பித்த உத்தரவு: வீட்டு வசதி வாரியத்தின் பதில் மனு மற்றும் ஐகோர்ட் உத்தரவுகளை பார்க்கும் போது, பொது ஏலத்தில் எடுக்கப்பட்ட நிலத்தை விஜய் தரப்பில் பயன்படுத்த முடியாமல் போனதால், அவருக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. நிலம் ஒதுக்கீடு செய்ததில் எந்த முறைகேடும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ஜோதிமணி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment