நாட்டின் பல இடங்களில் உள்ள மதுகோடாவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி மற்றும் அமலாக்கத்துறைகளின் அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். இதில் அவர் பல ஆயிரம் கோடி ஊழல் மற்றும் ஹவாலா குற்றங்கள் புரிந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கோடா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவருக்கும் அவரது சகாக்கள் 6 பேருக்கும் வருமான வரி மற்றும் அமலாக்கத்துறைகள் சம்மன் அனுப்பியுள்ளன. நாளைக்குள் தமது அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. தவறினால், சட்ட ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்குத் தெரிவிக்காமல் மது கோடாவை சிகிச்சை முடித்து அனுப்பக்கூடாது எனவும் மருத்துவமனை நிர்வாகத்திடம் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-கோடா தன மனைவியுடன் கைதுக்கு முன்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மது கோடா, ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தப் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் முதல்வராக மது கோடா பதவி வகித்த போது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ.2000 கோடி ஹவாலா மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து சமீபத்தில் மது கோடா வீட்டில் அமலாக்கப் பிரிவினர், வருவான வரித்துறையினர் என வரிசையாக சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.
அமலாக்கப் பிரிவினர் மது கோடாவை கைது செய்து விசாரிக்கவும் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை கைது செய்ய முடியாமல் போனது.
இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் கைது செய்யப்படுவார் என்று அமலாக்கப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
இதனால் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய மது கோடா கைது செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்படவில்லை.
எனினும், அமலாக்கப் பிரிவினர் கைது நடவடிக்கையில் இருந்து மது கோடா தப்பிக்க முடியாது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, வருமான வரித்துறையினர் மது கோடாவின் வீட்டுக்கேச் சென்று விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
""மது கோடாவிடம் விசாரணை நடத்தும் அளவுக்கு அவர் உடல் ரீதியாக தகுதியாக உள்ளார்'' என்று அவருக்கு சிகிக்சை அளித்த அப்துர் ரஸôக் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மது கோடா அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு பெரிய அளவில் அரசுப் பணத்தை கையாடல் செய்துள்ளார். எனவே இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள அமலாக்கப் பிரிவும், வருமான வரித்துறையும் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பான விசாரணை எல்லையை விஸ்தரிக்க பல்வேறு மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்புகளுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் இரு அமைப்புகளும் முடிவெடுத்துள்ளன.
கூட்டாளியிடம் விசாரணை தொடங்கியது:ரூ.2000 கோடி ஹவாலா மோசடி வழக்கில் கைது செய்த மது கோடாவின் கூட்டாளி விகாஸ் சின்காவை அமலாக்கப் பிரிவினர் விசாரணைக்காக தில்லிக்கு அழைத்துச் சென்றனர்.
ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ய மது கோடாவுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விகாஸ் சின்கா கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment