Pages

Saturday, November 7, 2009

நஞ்சை நிலங்களை கூறு போட்டு விற்ற பின்

தமிழகம் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சீராக வளர்ந்து வருகிறது. விவசாய வளர்ச்சியில் தமிழகம் அடைந்து வரும் வேகமான முன்னேற்றத் துக்கு விவசாயிகளின் கடின உழைப்புதான் காரணம். கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் தமிழக வேளாண் பல்கலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வேளாண் உற்பத்தியை பெருக்குவதில் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 1971ல் கோவைவேளாண் கல்லூரியை தமிழ்நாடு வேளாண் பல்கலையாக தரம் உயர்த்தினேன். இதன் காரணமாக இப்பல்கலையில் ஆராய்ச்சி செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டன.


விவசாய உற்பத்தியில் மனிதர்களுக்கு பதிலாக மெஷின்களை பயன்படுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் எதிர்ப்பு இருந்தது. ஆனால் இன்று மெஷின்களை விவசாயிகள் பயன்படுத்தத் துவங்கியதும், உணவு உற்பத்தியை பெருக்க மெஷின்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அரிசி, சோளம் உட்பட மொத்த உணவு தானிய உற்பத்தியில் நாம் சிறந்த இடத்தை அடைந்து விட்டாலும், பயறு மற்றும் எண்ணெய்வித்து உற்பத்தியில் இன்னும் உற்பத்தியை பெருக்க வேண்டியதுள்ளது. உற்பத்தியை பெருக்க, நவீன தொழில் நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பயிற்சி அளிக்க வேண்டும். கரும்பு, அரிசி, கோதுமை உற்பத்தியில் நம் நாடு உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பயறு உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், காய்கறிகள் மற்றும் பழ உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளோம். இந்த வளர்ச்சி போதாது. விவசாயத்தில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். இதற்கு விஞ்ஞானிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு, முதல்வர் பேசினார். -தேசிய மாநாடு, கோவை வேளாண் பல்கலையில் முதல்வர் பேசியது .

No comments:

Post a Comment