
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அதிகமான சீன மாணவர்களை சேர்த்து வருவதாக பல்கலைக்கழக ஆண்டு அறிக்கை கூறியது. பட்டப்படிப்புக்காக அதிக மாணவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பும் நாடுகள் வரிசையில் இந்தியா கடந்த எட்டு ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்து வருகிறது.
இந்தியாவிலிருந்து 103,260 மாணவர்கள் அங்கு சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை முந்திய ஆண்டைக் காட்டிலும் 9 விழுக்காடு அதிகமாகும்
இந்த வரிசையில் சீனா வெகு விரைவில் இந்த இடத்தைப் பிடித்துவிடும் என்று தெரிகிறது.
சென்ற ஆண்டு சீனா 98,510 மாணவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பியது. இதற்கு முந்திய ஆண்டுடன் ஒப்புநோக்க இது 21 விழுக்காடு அதிகமாகும்.
வரும் ஆண்டுகளில் சீனாவிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 100,000 மாணவர்கள் அமெரிக்கா வருவர் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அனைத்துலக பல்கலைக்கழக துணைத் தலைவர் பெகி புலுமென்தல் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் தகவல் கூறியது.
மொத்தத்தில் அமெரிக்கக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 8 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கை கூறியது.அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அதிகமான சீன மாணவர்களை சேர்த்து
No comments:
Post a Comment