Pages

Friday, November 20, 2009

தாமத தீர்ப்பு ?

வங்கதேச தலைவர் முஜுபுர் ரஹ்மானை கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனையை, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து பிரித்து வங்கதேசம் தனி நாடாக உருவாகக் காரணமாக இருந்தவர் முஜுபுர் ரஹ்மான். "வங்கதேச தந்தை' என அழைக்கப்படும் முஜுபுர் ரஹ்மான், 1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அதிபர் மாளிகையில் இருந்த போது, அவரையும், அவரது குடும்பத்தினரையும் ராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

முஜுபுர் ரஹ்மானின் மகள்கள் ஹேக் ஹசீனாவும், ரெஹானாவும் அந்த சமயத்தில் ஜெர்மனியில் இருந்தனர். இதனால், அவர்கள் இருவரும் இந்த படுகொலையில் இருந்து தப்பினர்.இந்த சம்பவத்துக்கு பிறகு, வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி நடந்தது. அதன் பின் மீண்டும் ஜனநாயகம் மலர்ந்தது. தற்போது, முஜுபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா பிரதமராக உள்ளார். முஜுபுர் ரஹ்மான் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் மீது, 1996ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முக்கிய ராணுவ அதிகாரிகள் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்து விட்டனர்.முஜுபுர் ரஹ்மான் படுகொலைக்கு காரணமான முன்னாள் ராணுவ தளபதிகள் சையத் பரூக் ரஹ்மான், சுல்தான் ஷரியர் ரஷீத் கான், முகைதீன் அகமது, முன்னாள் மேஜர்கள் முகைதீன் அகமது, பசுலுல் ஹுடா ஆகியோருக்கு தாகா ஐகோர்ட் மரண தண்டனை அறிவித்தது. இதை எதிர்த்து ஐந்து பேரும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. நீதிபதி தபாசுல் இஸ்லாம் தலைமையிலான பெஞ்ச், ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து ஐந்து பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது.இந்த தீர்ப்பின் காரணமாக, வங்கதேசம் முழுவதும் நேற்று பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.இந்த தீர்ப்பை கேட்ட ஆளும் அவாமி லீக் கட்சியினர் வெற்றிச் சின்னத்தைக் காட்டி, கோர்ட் அருகே மகிழ்ச்சி கோஷம் எழுப்பினர்.

No comments:

Post a Comment