
மதுரை: இலங்கை அகதிகளுக்கு "இரட்டை குடியுரிமை' வழங்க வேண்டும் என முகாமில் ஆய்வு செய்த அமைச்சர் தமிழரசியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கை அகதிகள் முகாமை ஆய்வு செய்யும் படி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
மற்ற மாவட்ட முகாம்களை அந்தந்த பகுதி அமைச்சர் கள் ஆய்வு செய்த நிலையில், மதுரை மாவட்ட முகாம்கள் ஆய்வு செய்யப் படாதது குறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. நேற்று அமைச்சர் தமிழரசி இம்முகாம்களை ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் மதிவாணன், மூர்த்தி எம்.எல்.ஏ., பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் முகமதுயூசுப், தாசில்தார்கள் உதயகுமார், அழகுமீனாள், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ் வரி சென்றனர்.கூடல்நகர் ஆனையூர் முகாம் அகதிகள் புகார் தெரிவித்தனர்.
"சாக்கடை நிரம்பி வழிகிறது. மழையால் வீடுகள் இடியும் நிலையில் உள்ளன. வசதியான ரோடு இல்லை. இருநாட்டுக்கும் சென்று வர "இரட்டை குடியுரிமை' வழங்க வேண்டும்' என்றனர். அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் 3 முகாம்களிலும் 1573 குடும்பங்களைச் சேர்ந்த 5232 பேர் வசிக்கின்றனர். இவர்களின் கோரிக்கைகள் பற்றி இன்று மாலையே முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக் கப்படும்' என்றார். பின் அவர் உச்சப்பட்டி, திருவாதவூர் முகாம்களுக்குச் சென்றார்.
அவசர ஆய்வு: ஆனையூர் அகதிகள் முகாம், தாழ்வான பகுதி என்பதால் மழைநீர் தேங்கி காணப்பட்டது. நல்ல ரோடு, கழிவுநீர் செல்லும் வசதி இல்லை. வீடுகள் மோசமான நிலையில் இருந் தன. ஆய்வு நடத்த சென்ற அமைச்சர் தமிழரசி முகாமுக்குள் சென்று பார்வையிடவில்லை. இரு இடங்களில் நின்றபடி குறைகளை கேட்டார். மனு பெற்றார். உச்சப்பட்டி, திருவாதவூர் முகாம்களில் மனுக்களை பெற் றதுடன், இடங்களை சுற்றிப் பார்க்கவில்லை. பத்தே நிமிடங்களில் திரும்பிவிட்டார்.
No comments:
Post a Comment