Pages

Saturday, November 21, 2009

ரத் பொன்சேகா உயிருக்கு ஆபத்து -வதந்தியா ?

இலங்கையில் அதிபர் ராஜபக்சேக்கும் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன் சேகாவுக்கும் மோதல் முற்றி உள்ளது. சரத் பொன்சேகாவை அரசியலுக்கு வரவிடாமல் விரட்டும் முயற்சிகளில் ராஜபக்சே ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் சரத் பொன்சேகா உயிருக்கு ஒரு பெண் விடுதலைப்புலி குறிவைத்து இருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை இன்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்த பெண் விடுதலைப்புலியின் பெயர் வசந்தி.

இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தற்கொலைப்படை பிரிவில் இருப்பவர். இவர் தற்போது கொழும்பு நகருக்குள் ஊடுருவி ரகசிய இடம் ஒன்றில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

வெடிகுண்டு பெண் வசந்திக்கு தமிழ் அரசியல்வாதி ஒருவர் எல்லா உதவிகளும் செய்து வருவதாக தெரிகிறது. ஈழத்தமிழர்களை கொன்று குவித்து மாபெரும் இனப்படுகொலையில் ஈடுட்ட பொன்சேகாவை கொன்று பழிக்கு பழி வாங்க வேண்டும் என்பதில் அந்த தமிழ் அரசியல்வாதி மிகவும் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தமிழ் அரசியல்வாதி விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தளபதியாக இருந்தவர். சில மாதங்களுக்கு முன்பே பொன்சேகா உயிருக்கு இவர் குறி வைத்தார்.

வெடிகுண்டு பெண் வசந்தியை அழைத்து வந்து கிருப்பலனையில் உள்ள வீடு ஒன்றில் தங்க வைத்திருந்தார்.

நார்வே தூதரகத்தில் பணியாற்றும் ஒருவரும் அந்த வெடிகுண்டு பெண்ணுக்கு உதவிகள் செய்ததாக கூறப்படுகிறது. சிங்கள உளவுப்படைக்கு இந்த தகவல் தெரிந்து விட்டதால் உஷாரான பெண் விடுதலைப்புலி வசந்தி தம்புள்ள பிரதேசத்திற்கு தப்பி சென்றுவிட்டார்.

தற்போது சூழ்நிலைகள் மாறிவிட்டதால் வெடிகுண்டு பெண் வசந்தியை மீண்டும், தமிழ் அரசியல்வாதி கொழும்புக்கு அழைத்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொன்சேகாவை அவர் எந்த நேரத்திலும் தாக்குவார் என்று கூறப்படுகிறது.

சரத்பொன்சேகா அதிகாரத்தில் இருந்தபோது அவருக்கு 200 ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக இருந்தனர். அதற்கு தடைபோட்ட சிங்கள பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்சே தற்போது சரத்பொன்சேகா பாதுகாப்புக்கு 32 பேரை மட்டுமே பணியில் அமர்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment