Pages

Tuesday, November 24, 2009

சுமார் 62 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த

தென் கொரியாவில் உள்ள கிம்சஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குழல் வடிவத்தை உடைய அதிசய மிருகத்தின் எலும்பு கூடு கிடைத்தது.

அதன் எலும்பு கூட்டை அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த மிருகம் சுமார் 62 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என கணக்கிட்டுள்ளனர்.

தென் கொரியாவில் வடக்கு வாங்கே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இது குழல் வடிவத்தில் வட்டத்துடன் கூடிய வயிற்றுப்பகுதி இல்லாத அதிசய மிருகமாகும்.

கடற்கரை பகுதியில் இதன் எலும்பு கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இது ஒருவகை கடல்வாழ் உயிரினமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.



மேலும் பூமியில் முதன் முதலாக எலும்புடன் தோன்றிய மிருகமாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

No comments:

Post a Comment