Pages

Sunday, November 8, 2009

இருக்கிற கல்லூரிகளில் சேர ஆள் இல்லை ?


அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படும் தரமான கல்வி வளர்ச்சிக்கு, இன்னமும் 27 ஆயிரம் புதிய கல்லூரிகள் தேவை என்று, டில் லியில் நடந்த பார்லிமென்டரி ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தலைமையில் அந்த அமைச்சக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், சிறப்பு உறுப்பினர்களாக டாக்டர் கபில் வாத்சாயனா, டாக்டர் ரஞ்சன் பிரசாத் யாதவ், ரமாதேவி, வசந்தி ஸ்டான்லி, தம்பிதுரை உட்பட பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் அரசு வெளியிட்ட கருத்து:அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மேல்நிலைக் கல்வி வசதிக்கு 14 ஆயிரம் கல்லூரிகள், 12 ஆயிரத்து 775 தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 269 பல்கலைக் கழகங்கள் தேவை.அப்படி இருந்தால் தான் மேற் கல்வி பயிலத் தகுதி படைத்த மாணவ, மாணவியர்க்கு கல்வி வசதி கிடைக்கும். அக்கல்வி வசதி கிடைத்தால் தான் வரும் 2020 ல் இந்தியா "சூப்பர் பவர்' அந்தஸ்து பெறும்.இக்கருத்து குறித்து ஆலோசனைக் கமிட்டியில் பங்கேற்ற பலரும் தெரிவித்த கருத்துக்கள்:

தற்போது மாநில அரசுகள் நடத்தும் கல்லூரிகள் உட்பட சிலவற்றில் போதிய வசதி வாய்ப்புகள் இல்லை, தனியார் கல்லூரிகள் அமைப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் இன்னமும் தகுதி, திறமை அதிகரிக்கப்பட ஒழுங்கு முறை நடைமுறைகள் உருவாக்க வேண்டும். தனியார் முதலீடு உயர்கல்வியில் அதிகரிக்கும் போது, அதன் தகுதி அதிகரிப் பதில் கவனம் தேவை.

இக்கருத்துக்களை ஆய்வு செய்து இந்த விஷயம் குறித்து அரசு ஆலோசிக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது:மேற்கல்விப் படிப்புக்கான ஒழுங்கு முறை அமைப்பு உருவாக்குவது என்பது, கல்வித் துறையில் அதிக தரம் உருவாக்கும் எண்ணத்தில் அமைந்தது.இது தொடர்பாக, ஏற்கனவே "அறிவுசார் கமிஷன்' மற்றும் யாஷ்பால் கமிட்டி அளித்த சிபாரிசுகளின் படி, இவை உருப் பெறும்.மிகவும் பின்தங்கிய பகுதிகளில் மத்திய பல் கலைக் கழகம் மற்றும் கலை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள் துவங்க மத்திய அரசு உதவும்.


இதற்கு நிதி ஒரு பிரச்னை அல்ல. வெளிநாட்டு கல்லூரிகளை அனுமதிக்கும் போது, அவை கட்டணம் என்ற பெயரில் பணத்தைச் சேகரித்து, அள்ளிச் செல்ல அனுமதிக்கப் படமாட்டாது. வெளிநாட்டு கல்லூரிகளில் பிரபல மானவை கூட, அறக் கட்டளை மூலம் தன் நிதி ஆதாரங்களை பெருக்குகின்றன. அதே போல, பல்கலைக் கழக ஆசிரியர் பணிக்கு அதிக சம்பளம் தந்து, இப்பணி மிகுந்த கவர்ச்சி உள்ளதாக ஆக்கப்படும். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

No comments:

Post a Comment