Pages

Sunday, November 15, 2009

ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நடிகை ?


இலியானா இப்‌‌போது ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு முன்னணி இடத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர தனியார் நிறுவன விழாக்களில் பங்கேற்பதற்கும் லகரங்களை வாங்கி வரும் இலியானா சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், "காதலிப்பது பாவம் இல்லை. என் பெற்றோர் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளனர். நான யாரையாவது காதலித்தால் அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என எனக்கு அனுமதி அளித்துள்ளனர். பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணத்தைவிட காதல் திருமணமே சிறந்தது. காதலிக்கும் போதுதான் ஒருவரையொருவர் புரிந்து கொள்கின்றனர். காதலர்கள் திருமணம் செய்து கொண்டால் சந்தோஷமாக இருப்பார்கள். பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்பது ஒரு சூதாட்டம் " என்கிறாராம் .

No comments:

Post a Comment