அமெரிக்கா கண்டத்தில் உள்ள கொலம்பியா நாட்டில் ஆயுதம் ஏந்திய கொரில்லா தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க அந்நாட்டு அதிபர் அல்வாரோ யுரிப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அந்நாட்டின் தெற்குகாகுவெடா மாகாணத்தின் கவர்னர் லூயிஸ் பிரான் சிங்கோ குவல்லர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
சம்பவத்தன்று இரவு தெற்கு சாகுவெடா மாகாணத்தின் தலைநகரான புளோரென்தியா நகரில் உள்ள வீட்டில் இருந்தார். அப்போது ராணுவ உடையில் அவரது வீட்டுக்குள் தீவிர வாதிகள் புகுந்தனர். பின்னர் அவரை கடத்த முயன்றனர்.
இதைப் பார்த்த அவரது மனைவி மற்றும் போலீஸ் பாதுகாவலரும் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் பாதுகாவ லரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். பிறகு குவல்லரை தரதர வென இழுத்து சென்று ஒரு வாகனத்தில் கடத்தி சென்றனர்.
இதைத் தொடர்ந்து அவரை மீட்கும் பணியில் கொலம்பியா அரசு ஈடுபட்டது. இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடத்தப்பட்ட கவர்னர் குவெல்லர் குறித்து தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருந்தும் அவரை உயிருடன் மீட்கவில்லை. தீவிரவாதி கள் அவரை சுட்டுக் கொன்றனர். அவரது பிணத்தை அப் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் வீசி சென்றனர். பிணத்தை கண்டுபிடித்து ராணுவத்தினர் மீட்டனர்.
அவரது உடலில் பல இடங்களில் குண்டு காயங்கள் இருந்தன. மேலும், அவரது உடலை சுற்றி வெடி பொருட்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 23 வருடத்தில் இவர் இதுவரை 4 முறை தீவிரவாதிகளால் கடத்தப் பட்டுள்ளார். இந்த தடவை தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் அதிபர் அல்வாரோ யுரிப்புக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார்.
இவர் கொல்லப்பட்ட சம்பவம் கொலம்பியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
Wednesday, December 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment