இங்கிலாந்து இளவரசர் வில்லியம் (27). இவர் தெரு வோரத்தில் ஒருநாள் இரவு தூங்கி பொழுதை கழித்தார். லண்டனில் வீடு இல்லாத “டீன்ஏஜ்” இளைஞர்கள் தெருவோரங்களில் படுத்து உறங்குகின்றனர். அவர்கள் படும் கஷ்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் இது போன்ற நடவடிக்கையில் ஈடு பட்டதாக பிரிட்டிஷ் வீடு இல்லாதோர் அறக்கட்டளை மைய பொறுப்பாளர் ஒபாகின் தெரிவித்தார். இந்த அமைப்பின் காப்பாளராக இளவரசர் வில்லியம் உள்ளார்.
மத்திய லண்டனில் உள்ள பிளாக் பிரையர்ஸ் பாலம் அருகே 4 டிகிரி சென்டிகிரேடு குளிரில் இளவரசர் வில்லியம் ஒரு மரப்பெட்டியின் மீது படுத்து உறங்கினார். அவரது இந்த நடவடிக்கை இங்கிலாந்து மக்கள் மனதில் நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Wednesday, December 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment