ஆஸ்திரேலியாவில் கடந்த 2003ல் தன்னுடன் ஒரே வீட்டில் தங்கி இருந்த சக சிங்கப்பூரர்கள் இரண்டு பேரைக் கொலை செய்ததற்காக ராம் புனீத் திவாரி என்ற சிங்கப்பூரருக்கு ஆஸ்திரேலிய நியூ சவுத் நீதிமன்றம் கூடினபட்சமாக 48 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
திவாரிக்கு வயது 30. அவர், தன்னுடன் தங்கி இருந்த சிங்கப்பூரர்களான டே சியோவ் லியாங் (26), டோனி டான் போ சுவான் (27) என்ற இரண்டு பேரை 2003 செப்டம்பர் 15ம் தேதி கொலை செய்ததாக அக்டோபர் 6ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
சிட்னி நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் நடந்த விசா£ணை முடிவில், நீதிபதி திரு பீட்டர் ஜான்சன் திவாரிக்குத் தண்டனை விதித்தார்.
திரு டேயைக் கொன்றதற்காக அவருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திரு டானைக் கொலை செய்ததற்காக அவருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனையை நீதிபதி விதித்தார்.
அந்த 30 ஆண்டுத் தண்டனை வரும் 2012ல் தான் தொடங்கும்.
திவாரி 204 முதலே சிறையில் இருந்து வருகிறார். நன்னடத்தைக் கண்காணிப்பில் வெளியில் வருவது, ஏற்கனவே அவர் அனுபவித்து வந்துள்ள சிறைத் தண்டனை எல்லாம் போக திவாரி 2042ல் விடுதலை ஆவார்.
திவாரியும் கொலையுண்ட இரண்டு பேரும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.
மட்டையால் அடிக்கப்பட்டும் கழுத்தில் பல தடவை குத்தப்பட்டும் இருவரும் கொலை செய்யப்பட்டனர். இரட்டைக் கொலைகளுக்காக திவாரி 2004 மே மாதம் கைதானார்.
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment