Pages

Monday, December 21, 2009

சிங்கப்பூர் - இந்தியா கூட்டுமுயற்சியில் 14 பல்கலைக்கழகங்கள்

இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து 14 புத்தாக்க பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அமைக்கவுள்ளதாக இந்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல் அறித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று நடந்த சிங்கப்பூர் கருத்தரங்கில் பேசியபோது திரு கபில் சிபல் இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவின் மாபெரும் திறனாளர் பற்றாக் குறையை ஈடுசெய்ய 21ம் நூற்றாண்டின் அதிநவீன பல்கலைக் கழகங்கள் தேவை. அத்தகைய பல்கலைக் கழகங்களை அமைப்பதில் பங்காளியாகச் செயல்படக் கூடிய சிறந்த நாடு சிங்கப்பூர் என்றார் அவர்.
சிங்கப்பூர் இந்தியாவுக்கு இடையே கட்டுமானம், கல்வி, திறன் மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் திரு கபில் சிபல் கூறினார்.
இந்தியக் கல்வித் துறையை மறுசீரமைக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் இதன் பலன் 2014ம் ஆண்டில் தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகின் தலைசிறந்த இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐஐடி) இந்தியாவுக்கு வெளியே கிளைகளை அமைப்பதில் இந்திய அரசு திறந்த மனதுடன் இருப்பதாகவும் கபில் சிபில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment