சென்னையில் ரேஷன் பொருள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, ரேஷன் கார்டுகள் குறித்த விவரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது ரேஷன்கார்டு எண்ணை, இணையதளத்தில் பதிவு செய்தால், அந்த கார்டு தற்காலிக பொருள் நிறுத்த ஆணையில் இடம் பெற்றுள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழக அரசின் உணவுத்துறை செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை பெரம்பூர், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆவடி, தி.நகர், சைதாப்பேட்டை, பரங்கிமலை, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில், புழக்கத்தில் உள்ள ரேஷன்கார்டுகள் அனைத்தும், தணிக்கை செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
தணிக்கையின்போது இல்லாத குடும்பங்கள் மற்றும் முகவரி மாறிய குடும்பங்களின் ரேஷன்கார்டுகளுக்கு பொருள் வழங்கல்நிறுத்தஆணைகள்பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து,ரேஷன்கடைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பொருள் வழங்கல் நிறுத்தப்பட்ட கார்டுதாரர்கள், முறையீடு செய்வதற்காக, இதுவரை பொருள் பெற்று வந்த ரேஷன்கடைகளிலேயே, முறையீடு படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த படிவங்களைப் பெற்று, அதில் விவரங்களைப் பூர்த்தி செய்து, ரேஷன்கார்டு நகல் மற்றும் இருப்பிட ஆதாரத்தின் நகலை இணைத்து, அந்தந்த ரேஷன்கடையிலேயே, ஜனவரி 31ம்தேதிக்குள் கொடுத்து, ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment