உடம்பு முழுக்க பெயின்ட் பூசி காந்தி வேடமிட்டு ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்க வைத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்திலும், பிளாட்பாரத்திலும் பிச்சைக்காரர்கள் பயணிகளுக்கு இடையூறாக பிச்சை எடுப்பதாக, தாம்பரம் ரயில்வே பாதுப்பு படை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார், தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று சோதனையிட்டனர். அப்போது, 7 வயது சிறுவன் காந்தி வேடம் அணிந்து, பயணிகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.
மொட்டை தலையுடன் கையில் தடி வைத்துக் கொண்டு, உடம்பில் சாயம் பூசிக் கொண்டு காந்தி சிலைபோல அசையாமல் நின்றிருந்தான்.
அந்த சிறுவனை போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவன் பிச்சை எடுத்த ரூ.96 பணம் வைத்திருந்தான். விசாரணையில், அந்த சிறுவன் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துனி கிராமத்தை சேர்ந்தவன் என்பது தெரிந்தது. அவனுடைய தந்தை ஜலகம் சீனு (45). இவரும் ரயில்களில் பிச்சை எடுக்கிறார் என்பது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, மகனை பிச்சை எடுக்க அனுப்பிய ஜலகம் சீனுவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை தந்தையே பிச்சை எடுக்க வைத்த சம்பவம் மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment