விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்துவதற்கு பயன்பட்ட கப்பல், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்வராசா பத்மநாதன், கடந்த ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டார். இலங்கை பாதுகாப்பு படையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், புலிகளுக்கு சொந்தமாக ஐந்து கப்பல்கள் இருப்பதும், 600க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இந்த கப்பல்களை பறிமுதல் செய்வதற்கும், வங்கி கணக்குகளை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கெகலியா ரம்புக்வெல்லா சில நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இலங்கையில் போர் நடந்தபோது, புலிகளுக்கு ஆயுதம் கடத்த பயன்பட்ட எம்.வி.பிரின்ஸ் கிறிஸ்டினா என்ற மிகப் பெரிய கப்பல் ஒன்றை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது.இதற்கிடையே, இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா பொதுச் செயலர் தில்வின் சில்வா கூறுகையில்,"ராணுவத் தளபதி பதவியில் இருந்து சரத் பொன்சேகா நீக்கப்பட்டதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ராணுவ புரட்சி நடக்கும் என்ற அச்சம் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இதற்கான உண்மையான காரணத்தை அரசு உடனடியாக தெரிவிக்க வேண்டும்"என்றார்.
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment