Wednesday, December 23, 2009
இஸ்ரேலில் ஏசு வாழ்ந்த காலத்து வீடு கண்டுபிடிப்பு
ஏசு கிறிஸ்து பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லேமில் பிறந்தார். பின்னர் அவரது குடும்பம் இஸ்ரேலில் உள்ள நாசரேத் நகரில் குடியேறியது. சிறு வயதில் ஏசு அங்குதான் வசித்து வந்தார்.
தற்போது நாசரேத் 65 ஆயிரம் மக்கள் வசிக்கும் பெரிய நகரமாக திகழ்கிறது.
ஏசு காலத்தில் இந்த நகரம் எப்படி இருந்தது? என்பதை குறிப்பிடும் வகையில் உள்ள பழங்கால கட்டிடங்கள் இல்லை. அந்த காலத்தில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் அழிந்து விட்டன.
இந்த நிலையில் நாசரேத் நகருக்கு வெளியே இஸ்ரேல் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது ஒரு இடத்தில் 50 வீடுகள் புதைந்து கிடந்ததை கண்டு பிடித்தனர். 4 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அவை புதைந்து கிடந்தன. இந்த வீடுகள் ஏசு காலத்து வீடுகளாக இருக்கலாம் என்று ஆய்வாளர் யார்தனா அலக்சான்டிரா தெரிவித்தார்.
இந்த வீடுகள் சிறிய அளவில் இருக்கின்றன. சுண்ணாம்பு கற்கள் மற்றும் களி மண்ணை பயன்படுத்தி வீடுகளை கட்டி உள்ளனர். உணவு மற்றும் தண்ணீரை சேகரித்து வைக்கும் பாத்திரங்களும் அங்கு கிடந்தன.
கி.மு. 100-ம் ஆண்டில் இருந்து கிபி. 100-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த வீடுகள் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
நாசரேத் பிற்காலத்தில் ரோம் மன்னர்களின் பிடியில் வந்தது. அப்போது இந்த நகரம் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment