Pages

Wednesday, December 23, 2009

ராகுல் காந்தி ஸ்டண்ட்

பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த ராகுல், அங்குள்ள கிராமம் ஒன்றில் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுடன் கலந்துரையாடினார். பின்னர் பாபினா தாலுக்காவில் உள்ள கோவாலி கிராமத்திற்கு சென்ற ராகுல், அங்கு பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த துவாரிகா பிரசாத் ரெய்க்வார் மற்றும் ரேகா தேவி கேவத் என்ற தம்பதியரின் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார். தொழிலாளியான ரெய்க்வாரின் மனைவி, சுய உதவிக் குழுவில் தீவிரமாக பங்காற்றி வருகிறார். அவர் ராகுலுக்கு பருப்பு, பட்டாணி, உருளைக்கிழங்கு குருமா, பூரி மற்றும் சாதம் போன்றவற்றை பரிமாறினார். அந்த குடும்பத்தினருடன் ஒரு மணி நேரத்தை செலவிட்டார் ராகுல். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment