Pages

Wednesday, December 23, 2009

முதலில் சிம்பு பின்னர் ரஜினி இப்பொழுது கமல் - நயனதாரா

கமலை வைத்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய “தசாவதாரம்” படம் வெற்றிகரமாக ஓடியது. மீண்டும் ஒரு படத்தில் இருவரும் இணைகிறார்கள். உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படவேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

கமல் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வருகிறது. தமன்னாவை முதலில் பரிசீலித்தனர். இவர் நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயாவை தொடர்ந்து முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். பெரிய ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார். எனவே அவரையே ஜோடியாக்கலாம் என கருதினர்.

ஆனால் தற்போது திடீரென்று அவர் மாற்றப்பட்டு நயன்தாராவை தேர்வு செய்துள்ளதாக ரவிக்குமாருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ரிலீசான “ஆதவன்” படம் தயாரானபோது ரவிக்குமார், நயன்தாரா நட்பு வலுத்தது. எனவே அவர் நயன்தாராவை சிபாரிசு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முதல் தடவையாக இப்படம் மூலம் கமல் ஜோடியாகிறார் நயன்தாரா.

No comments:

Post a Comment