சென்னை ஐகோர்ட் வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
ஐகோர்ட் வளாகத்தில் இருந்த போலீஸ் நிலையம் வக்கீல்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது ? ஏராளமான கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றம் சாட்டினார்கள். இந்த சம்பவம் குறித்து ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டிலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்தது.
சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தர விட்டது. சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை சுமார் 7 மாதம் நடந்தது. கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.
சென்னை மாநகரின் அப்போதைய போலீஸ் அதிகாரிகளான கமிஷனர் ராதா கிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன், வடக்கு மண்டல இணைக்கமிஷனர் ராமசுப்பிரமணி, பூக்கடை போலீஸ் துணைக்கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகிய 4 பேர் தான் இந்த மோதல் சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். எனவே 4 போலீஸ் அதிகாரிகளையும் சஸ்பெண்டு செய்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்தனர். வழக்கு விசாரணைகள் நேர்மையா கவும், பாரபட்சமின்றியும் நடைபெற 4 போலீஸ் அதிகாரிள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக 4 போலீஸ் அதிகாரிகளையும் ஆஜராகுமாறு கோர்ட்டு உத்தர விட்டது. ஆனால் போலீஸ் அதிகாரிகள் ஆஜராகவில்லை. இதையடுத்து வரும் 18-ந் தேதி தவறாமல் ஆஜராக வேண்டும் என்று 4 போலீஸ் அதிகாரிகளுக்கும் ஐகோர்ட் உத்தர விட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் நேற்று ஒரு மனுவை ஹரீஸ்குமார் தாக்கல் செய்தார். அதில் போலீஸ்-வக்கீல் மோதல் சம்பவம் குறித்து சென்னை ஐகோர்ட் அளித்துள்ள உத்தரவு குறித்து பல்வேறு கேள்விகளை தமிழக அரசு எழுப்பி உள்ளது. அந்த மனு விவரம் வருமாறு:-
சென்னையில் 2009 பிப்ரவரி மாதம் நடந்த போலீஸ்-வக்கீல் மோதல் விவகாரத்தில் ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பல்வேறு கேள்விக்குறிகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் பொது உத்தரவை பேணும் அதிகார எல்லைக்குள் சென்னை ஐகோர்ட் உள்ளதா? ஐகோர்ட் வளாகத்துக்குள் பொது உத்தரவை அமல்படுத்தும் அதிகாரம் ஐகோர்ட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளதா?
ஐகோர்ட் வளாகத்துக்குள் சட்டம்-ஒழுங்கு பிரச்சி னையை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவும், போலீசார் உள்ளே சென்று தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் கோர்ட்டில்முன் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை சரியானது தானா? தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஐகோர்ட் வளாகம் உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக விஷயத்தில் சட்டப்பூர்வ உரிமை எந்த அளவுக்கு உள்ளது? இந்த மோதல் சம்பவத்தை பொறுத்தவரை தமிழக போலீஸ் அதிகாரிகள் சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட உண்மையான வர்களாக நடந்து கொண்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தில் எந்தவித சதி திட்டமும் இல்லை சம்பவம் நடந்த போது ஐகோர்ட் வளாக பகுதியில் இருந்த போலீஸ் அதிகாரிகள், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.
இதில் சி.பி.ஐ.விசாரணை என்பது கேலிக் கூத்தான ஒரு சம்பிரதாயமாகவே இருக்கும். மேலும் அரசின் ஒரு நபர் கமிஷன் விசாரணையை சி.பி.ஐ. விசாரணை பாதிப்பதாக அமைந்து விடும் சி.பி.ஐ. விசாரணையால் எந்த தகவலையும் தர இயலாது.
எனவே இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அதோடு இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.இதை மற்ற மாநில முதல்வர்களும் ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்களாம் ?
Thursday, December 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment