Pages

Thursday, December 3, 2009

நான் இனி ரீமா சென் இல்லை - ரீம்மா ?

நடிகை ரீமா சென் ராசிக்காகவோ என்னவோ தனது பெயரை ரீம்மா என்று மாற்றி விட்டார். இனிமேல் அவரது பெயர் ரீம்மா மட்டுமே 'சென்'னை தூக்கி விட்டார். ரீம்மா கையில் தற்போது இருக்கும் ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன்தான். இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் அழுத்தமாக இருந்ததால் படத்தின் தொடர் தாமதத்தைப் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்தார் ரீம்மா. ஆனால் படம் எப்போது வரும் என்பதே தெரியாமல் இருப்பதால் சலித்துப் போய் விட்டார். இருப்பினும் இந்தப் படத்தால் தனது மார்க்கெட் வேகமாக உயர்ந்து விடும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறார் ரீம்மா. சரி உங்களோட கதாபாத்திரம் குறித்து சொல்லுங்களேன் என்று கேட்டால், அனைத்து அம்சங்களும் நிறைந்த பெண்ணாக இதில் வருகிறேன். அமைதியானவள், ஆக்ரோஷமானவள், மயக்கும் சாகசக்காரி, பிடிவாதக்காரி என எல்லாமே கலந்த கலவைதான் இப்படத்தில் நான் ஏற்றுள்ள பாத்திரம். வித்தியாசமான கதாபாத்திரம் இப்படி இதுவரை நடித்ததில்லை என்கிறார் ரீம்மா. இனிமேல் நல்ல வலுவள்ள பாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறார் ரீம்மா. வெறும் கவர்ச்சி காட்டிக் கொண்டு மட்டுமே நடிக்க எனக்குப் பிடிக்கவில்லை. அறிவுப்பூர்வமான கவர்ச்சிக்கே இனி எனது ஓட்டு என்கிறார்.

No comments:

Post a Comment