உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள கல்பான்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் அஜய் தாகூர். அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் உல்லாச மாகவும் இருந்து வந்தனர். அஜய் தாகூருக்கு எய்ட்ஸ் நோய் இருந்துள்ளது. அது தெரியாமலேயே அந்த பெண் காதலித்து இருக்கிறார்.
இருவரும் உல்லாசமாக இருந்ததால் அந்த பெண்ணுக்கும் எய்ட்ஸ் நோய் பரவிவிட்டது.
இதனால் அவர் அஜய்தாகூரிடம் சண்டை போட்டார். அதற்கு நஷ்ட ஈடாக பெரிய அளவில் பணம் தரும்படி கேட்டு வந்தார்.
இந்த நிலையில் அஜய் தாகூர் கான்பூரில் நடந்த நண்பர் திருமணத்துக்கு சென்றார். பின்னர் ஊர் திரும்பவில்லை.
அஜய்தாகூர் கத்திக்குத்து காயங்களுடன் காட்டில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த பெண்ணை காணவில்லை. எனவே அவர்தான் கொலை செய்து இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
Thursday, December 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment