
பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய சூர்யா உட்பட நடிகர், நடிகைகள் எட்டு பேரும் ஜன., 6ல் பழநி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட் சரத்ராஜ் உத்தரவிட்டார்.
திண்டுக்கல் பிரஸ் கிளப் உறுப்பினர் எம்.மதிவாணன் சார்பாக வக்கீல் பி.எஸ்.கோபிநாத், பழநி கோர்ட்டில் கடந்த அக்., 27ல் தாக்கல் செய்திருந்த மனு:சென்னையில் விபசாரத்தில் ஈடுபட்டதாக அக்., 3ல் கைதான நடிகை புவனேஸ்வரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தந்த தகவல்படி, சில நடிகைகளின் பெயர் போட்டோவுடன், "தினமலர்' இதழில் செய்தியாக வெளியானது. இதில் உள்நோக்கம் இல்லை என, மறுநாள் அறிவிப்பும் வெளியிடப் பட்டது.அவதூறு: தினமலர் செய்தியைக் கண்டித்து நடிகர், நடிகைகளின் கண்டனக் கூட்டம், அக்.,7ல் விண் "டிவி'யில் ஒளிபரப்பானது. கூட்டத்தில் சூர்யா, சரத்குமார், ஸ்ரீபிரியா, விஜயகுமார், சத்யராஜ், அருண் விஜய், சேரன், விவேக் ஆகிய எட்டு பேரும் பத்திரிகையாளர்களை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியது ஒளிபரப்பானது. இவர்களுக்கு சட்டப் படி தண்டனை அளிக்க வேண்டும் என, மனுவில் கூறப்பட்டிருந்தது.

சம்மன்: மாஜிஸ்திரேட் சரத்ராஜ் முன் இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அவதூறாக பேசிய சூர்யா உட்பட எட்டு பேரும் ஜன., 6ல் பழநி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment