
ரேனிகுண்டா படத்தில் நாயகி சனுஷாவுக்கு அக்காவாக நடித்தவர் நடிகை சஞ்சனா. படத்தில் விலைமாதராக நடித்த சஞ்சனா, ரேனிகுண்டா அனுபவம் குறித்து கூறுகையில், ரேனிகுண்டாவில் விபசாரம் செய்யும் பெண்ணாக நடிக்க வேண்டும் என்று சொன்னதும் ஆரம்பத்தில் கொஞ்சம் யோசித்தேன். அதன் பிறகு நடிக்க ஒப்புக் கொண்டேன். விபசாரி வேடத்தில் நடிக்க ரொம்ப சிரமப்பட்டேன். இப்போது அந்த சிரமத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது. படம் பார்த்த பலரும் என்னையும், எனது நடிப்பையும் பாராட்டுகிறார்கள். இருந்தாலும் இனி நடிக்கும் படங்களில் நல்ல ரோலில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கிறேன், என்றார். டில்லியை சேர்ந்த சஞ்சனா விரைவில் சென்னைக்கு வந்து செட்டிலாகப் போகிறாராம்.
No comments:
Post a Comment