
அவள் பெயர் தமிழரசி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் நந்தகி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். அங்கு உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளது. நடிப்புக்கு முதலில் நோ சொன்னவர், கதையை கேட்டு உடனே நடிக்க சம்மதித்து விட்டார். படத்தில் இடைவேளை வரை பாவாடை தாவணியிலேயே நடித்துள்ளார். +2 முடித்துவிட்டு தற்போது காஞ்சிபுரத்திலேயே ஃபேஷன் டிசைனிங் படித்து வருகிறார், நந்தகி.
No comments:
Post a Comment