Sunday, December 20, 2009
புதிய நியூஸ் சேனல்
சீரியல்களும், சினிமாக்களும் இல்லாத டி.வி., சேனல்களே இல்லை என்று சொல்லும் அளவுக்குத்தான் எல்லா மொழி சேனல்களும் இருக்கின்றன. இந்நிலையில் சினிமாவே இல்லாத நியூஸ் சேனல் ஒன்று உதயமாகவிருக்கிறது. நியூஸ் பிளஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த சேனல் பொங்கலுக்குள் செயல்படத் தொடங்கும் என்று இந்திய சமூக நீதி இயக்கத்தின் நிறுவனம் பேராசிரியர் எஸ்ரா சற்குணம் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில்," சினிமா இல்லாத புதிய சேனல் வரும் பொங்கலுக்குள் தொடங்க உள்ளோம். இந்த சேனலில் செய்திகள் மற்றும் மக்களுக்கு தேவையான, அறிவை பெருக்கிக் கொள்ளக்கூடிய தகவல்கள் வழங்கப்படும். கிறிஸ்தவம் தொடர்பான நிகழ்ச்சி தினமும் 4 மணி நேரம் ஒளிபரப்பாகும். இதற்கு விழுப்புரத்தை சேர்ந்த இந்திய சமூக நீதி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் ஜெயராஜ் நிர்வாக இயக்குநராக இருப்பார்"என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment