சென்னையில் புதிய தலைமைச் செயலக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அண்ணாசாலையில் இருந்து சுவாமி சிவானந்தா சாலைக்கு திரும்பும் இடத்தில், வலது புறத்தில் ஆங்கிலேய 7வது எட்வர்ட் மன்னர் சிலை இருந்தது. ஓமந்தூரார் அரசினர் தோட்டம் என்ற அறிவிப்பு பலகைக்கு நேர் எதிரே இருந்த அச்சிலையை, இரவோடு இரவாக மாநகராட்சியினர் அப்பறப்படுத்தி பத்திரமாக வைத்துள்ளனர்.
அதே போல், அண்ணாசாலையில் இருந்து செல்லும் போது சுவாமி சிவானந்தா சாலையின் முடிவில் 5வது ஜார்ஜ் மன்னர் சிலை வைக்கப்பட்டிருந்தது. காமராஜர் சாலையில் இருந்து புதிய தலைமை செயலகத்திற்கு செல்லும் சுவாமி சிவானந்தா சாலை அகலமாக்கப்படுகிறது.அப்பணிக்கு இடையூறாக இருந்த ஜார்ஜ் மன்னர் சிலையையும் மாநகராட்சியினர் அப்புறப்படுத்தினர்.
இச்சிலைகள் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளன. இவற்றை வேறு இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுமா? என அதிகாரிகளிடம் கேட்ட போது, "அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை" என பதிலளித்தனர்.
No comments:
Post a Comment