Pages

Sunday, December 20, 2009

கோவையில் பிச்சைகார பெண்மணிகளை கற்பழிக்கும் மர்ம மனிதர்கள்

கோவை நகரில் பிச்சைக்கார பெண்கள், மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. கோவை நகரில் சுற்றித்திரிந்த 340 பிச்சைக்காரர்களை மாநகராட்சி நிர்வாகம், டான்பாஸ்கோ அன்பு இல்லம் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் மீட்டு, தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். அதன் பின், தனியார் மருத்துவமனையின் மனநல ஆலோசகர்கள் மூலம் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை நிலை குறித்த தகவல் திரட்டப்பட்டது.


இதில், 52 பெண்கள் மற்றும் குழந்தைகள், வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இரவில் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருந்த பிச்சைக்கார பெண்களில் சிலர் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, குழந்தை பிறந்துள்ளதும் அம்பலமானது. இன்னும் சிலர், பிச்சை எடுக்கும் தொழிலுக்காக வேறு மாநிலங்களிலிருந்து குழந்தைகளை வாடகைக்கு எடுத்து வந்துள்ளதும் தெரியவந்தது; இவற்றில் சில குழந்தைகள் மன நலம் குன்றியவர்கள். இவர்கள், உதவும் கரங்கள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதே போன்று, வாரிசுகளால் வீட்டிலிருந்து விரட்டி விடப்பட்ட 23 வயோதிகர்கள் கோவையிலுள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். தவிர, அன்றாடம் பிச்சை எடுத்து வருவாய் ஈட்டி, குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கும் வகையில் 100 வயோதிகர்கள் இருந்தனர். இவர்கள் மொபைல் போன் சகிதமாக பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவதும் தெரியவந்தது. இவர்களுக்கு அறிவுரை வழங்கி, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இது குறித்து, மாநகராட்சி நகர் நல அலுவலர் (பொறுப்பு) சுமதி "வித்தியாசமான முறையில் பிச்சை எடுப்போரை நேரில் பார்க்க முடிந்தது. பிச்சை எடுப்பதை, அன்றாட தொழிலாக இளம் பெண்கள் முதல் வயோதிகர்கள் வரை செய்கின்றனர். வெளிமாநில குழந்தைகளை ஒரு நாள் வாடகைக்கு 20 ரூபாய்க்கு எடுத்து வந்து பிச்சை எடுப்பதும் தெரியவந்துள்ளது. "மீண்டும் பிச்சை எடுக்க வந்தால் கைது செய்யப்படுவீர்கள்" என்று எச்சரித்து அனுப்பியுள்ளோம்.

No comments:

Post a Comment