Pages

Sunday, December 20, 2009

சாமியாருக்கு வாரன்ட் ?

தேனாம்பேட்டையை சேர்ந்தவர் ஹேமலதா (30). இவர் மாம்பலம் போலீசில் அளித்த புகார் மனுவில், ‘‘நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசிக்கும் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார், தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்’’ என்று கூறியிருந்தார். அதன்படி, சாமியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஹேமலதாவுக்கு 2 நாள் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், விசாரணைக்கு வருமாறு சாமியாரை போலீசார் அழைத்தனர். அதற்கு தன் இடத் துக்கே வந்து விசாரிக்கலாம் என்று கூறினார். அதை போலீசார் ஏற்கவில்லை. இதையடுத்து, போலீஸ் விசாரணைக்கு சாமியார் நேற்று ஆஜராவார் என்று அவரது தரப்பில் கூறப்பட்டது. ஆனால், நேற்றும் அவர் ஆஜராகவில்லை.

திடீரென சாமியார் வெளியூர் சென்று விட்டதாகவும், அவரது வாக்குமூலத்தை உதவியாளர் மூலம் போலீசாருக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. சாமியார் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால், இன்று போலீஸ் முன்னிலையில் சாமியார் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹேமலதாவின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சாமியாரை கைது செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.

No comments:

Post a Comment